Sunday, July 19, 2015

சிதறல்கள்








விபத்து நேர்ந்த இடத்தில் சிதறிக்கிடந்தது 
நசுங்கிய டிஃபன் பாக்ஸும் 
அதனுள் அவனுக்கு பிடித்தமான
கருணை கிழங்கு மசியல்.. 
வெண்டைக்காய் மோர் குழம்பு விட்டு பிசைந்த சாதம்

மற்றும் கடந்து போன நினைவுகள்  
நிறைவேறாத சில கனவுகள்...   
                                      
காற்றில் கரைந்தது 
டிஃபன் பாக்ஸை சுத்தமா காலி பண்ணிடனும் 
என்று அவன் அம்மா சொன்ன வார்தைகளும் 
அவனது கடைசி உயிர் மூச்சும

No comments:

Post a Comment