Monday, July 20, 2015

மழைக் கவிதைகள்









முதல் மழைத் துளி பட்டதுமே
முகம் சுளித்தீர்கள்

தூறல் தொடங்கியதும்
அசச்சச்சோ என்று சொன்னீர்கள்

சாரல் அடித்ததும் சனியன் பிடித்த
மழை என்றீர்.
சிறு மழை கொடுமை, பெரு மழை பேரழிவு
என்றெல்லாம் விமர்சித்தீர்கள்

சடசட என பெய்த மழைக்கு
படபடவென குடை விரித்தீர்கள்..

உமக்காகவே வெய்யில் தொடங்கியதும்
நீங்கள் புலம்பியதோ

“த்சூ.. சூ, எப்ப தான் மழை வருமோ?

***************************************
கொட்டும் மழையில்
சொட்டசொட்ட
நனைந்து பாருங்கள்.

ஒன்றும் உருகி விட மாட்டீர்கள்..

ஜலதோஷம் ஒருவேளை வரலாம்!
வராமலும் போகலாம்!
ஆனால் கண்டிப்பாக வரும் சந்தோஷம்....

No comments:

Post a Comment