Sunday, July 19, 2015

ஐன்ஸ்டீனும் என் காதலியும்



 
 
 
 
 
 
 
********************************************************************************

ஒரு நேர்க்கோடு வான்வெளிக்கப்பால் வளையக்கூடும் என்ற
ஐன்ஸ்டீன் விதி  புரியவில்லை
அவளது நேர் கொண்ட பார்வை என் கண்களை சந்தித்து
பின் தாழும் வரை..
---------------------------------------------------------------------
ஐன்ஸ்டீன் விதி தெரிந்தது
பால் வீதி சூட்சுமம் புரிந்தது
ஆனால் அவள் உதட்டு சுழிப்புக்கு மட்டும் அர்த்தம் தெரியவில்லை.....
-----------------------------------------------------------------------
ஐன்ஸ்டீன் விதித்த ‘சார்பு கொள்கை’– விளக்கம் எளிமையாக-      
ஒரு நொடிக்கும் சற்றே குறைவாகத்தான் இருக்கும்
அவள் பார்வை என் மீது பட்டு விலகிய நேரம்...
நாள் முழுக்க நினைவில் தேங்கியது
முனை ஒடிந்த முள்ளாக....
-----------------------------------------------------------------------
ஐன்ஸ்டீன் கூட சிலசமயம் உளறியிருக்க கூடும்
 –என்னைப்போல் -
தன் காதலியை பற்றி பேசும் போதெல்லாம்...
********************************************



No comments:

Post a Comment