மை விகடன் - டாப் 5 வாசகர்கள் இவர்கள்

விகடன் வாசகர்கள் பலரும் நம் நிருபர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு vikatan.com இணையதளத்தில் கலக்குகிறார்கள். ‘மை விகடன்’ பக்கத்தில் எழுதிக் குவித்த டாப் 5 வாசகர்கள் இவர்கள்
மணிகண்டபிரபு
மை விகடனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் அனுப்பி செஞ்சுரி அடித்திருக்கிறார், பள்ளி ஆசிரியர் மணிகண்ட பிரபு. வரலாற்றுத் தகவல்கள், வாசிப்பு அனுபவம், நாஸ்டால்ஜிக் நினைவுகள், காமெடி துணுக்குகள் என வெவ்வேறு ஸ்டைலில் கட்டுரை எழுதக்கூடியவர். சஞ்சய் காந்தி பற்றி இவர் எழுதிய வரலாற்றுக் கட்டுரை செம ரீச்.எல்.கே.ஜி குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பு பற்றி இவர் பதிவு செய்த ஹியூமர் கட்டுரை அப்ளாஸ் அள்ளியது

காரை அக்பர் (ஜலாலுதீன் அக்பர்)
நாஸ்டாலஜி கட்டுரைகளால் வாசகர்களைத் தங்களின் பால்யத்திற்கு அழைத்துச் செல்லும் காரை அக்பர், பிரான்ஸில் மெக்டொனால்ட் நிறுவனத்தின் மேனேஜர். ‘ஜுனூன் தமிழும் டைனாசிட்டி சீரியல் அலப்பறைகளும்!’, `சீத்தா ஃபைட் தீப்பெட்டி முதல் கோபால் பல்பொடி வரை! - அந்த நாள் விளம்பரங்கள்’ என இவர் எழுதிய எவர்கிரீன் கட்டுரைகள் நம் பால்ய நினைவுகளை மீட்டெடுக்கும். கொத்து பரோட்டா பற்றி இவர் எழுதிய கட்டுரைக்கு பாசிட்டிவ் கமெண்டுகள் குவிந்தன.

சசிதரன்
சென்னைவாசியான சசிதரன், ஓய்வுபெற்ற இந்தியன் வங்கி மேலாளர். `இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சி சாப்பிடக் கிடைச்சது...’ என்ற பாடல் வரிகளின் தடம் பற்றி சசிதரன் தன் ஒவ்வொரு கட்டுரையிலும் உணவுகளைப் பற்றி ரசனை குறையாமல் எழுதியிருப்பார். சென்னை உணவு குறித்த நாஸ்டால்ஜிக் கட்டுரை, 70’ஸ் சென்னைவாசிகளின் நினைவலைகளைக் கண்டிப்பாகத் தட்டி எழுப்பியிருக்கும். அவரின் ‘ரசா’னுபவம், ரசத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா என்று நம்மை யோசிக்க வைத்துவிட்டது. உப்புமா பற்றிய அவரின் கட்டுரைக்கு செம ரெஸ்பான்ஸ்!

ரேவதி
எழுத்துமீது அதீத ஆர்வம் கொண்ட ரேவதி, எஸ்.பி.ஐ வங்கியில் பணிபுரிகிறார். அம்மா, அப்பா, தோழி, பாட்டி என உறவுகளைப் பற்றித் தன் வாழ்வின் பக்கங்களை இயல்பான தொனியில் பகிர்ந்திருக்கிறார். இசை, மழை, அரசு வேலை, உணவகம் ஆகியவற்றைப் பற்றி இவர் எழுதிய உணர்வுபூர்வமான குறுங்கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றன.

ஆத்மநாதன்
அமெரிக்காவில் வசிக்கும் ஆத்மநாதன், அனுபவக் கட்டுரைகள் எழுதுவதில் தனித்துவம் பெற்றவர். கொரோனாச் சூழலை அமெரிக்கா எப்படிக் கையாள்கிறது, தடுப்பூசி போட்டுக்கொண்ட அனுபவம், இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற அனுபவம் என இவர் அனுப்பிய அனுபவக் கட்டுரைகள் இணையத்தில் அதிகம் வாசிக்கப்பட்டன. அவ்வப்போது தன் கல்லூரிக்காலம், பால்ய நட்பு என 70’ஸ் கிட் மனநிலையைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளையும் பகிர்வார்.
No comments:
Post a Comment