Sunday, June 8, 2008

தலைவா வாழ்க!

-சசி


தலைவனுக்கு சிலைகள் வைப்போம்
பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று
பந்தல் கட்டி மலர் மாலைகள் அணிவிப்போம்

மற்ற நாட்களில் பறவைகள் இளைப்பாற
மற்றும் காகங்கள் எச்சமிட ...

தலைவன் இறந்த தினம் அன்று
கருப்பு கொடி அணிந்து
துக்கம் அனுஷ்டிப்போம்
"தலைவா வாழ்க!" என்று போஸ்டர் ஒட்டுவோம்
மறுநாள் அவற்றை மாடுகள் தின்னும்.

தலைவன் மீளா துயில் கொள்ளும் இடத்தில்
ஒரு அழகிய சமாதி கட்டுவோம்
தலைவனுடன் அவன் கொள்கைகளையும்
அதனுள் புதைத்து - பின்னர்
நினைவு நாள் அன்று
மலரஞ்சலி செலுத்துவோம்

மற்ற நாட்களில் பொது மக்கள்
சுற்றி பார்க்க ஒரு
சுற்றுலா தலம்

No comments:

Post a Comment