இவன்...
நிஜமுகங்களை தவிர்த்து
முகநூலில் புழங்கினான்
.
சமூக சீர்கேட்டை எதிர்க்கத் திராணியின்றி
வாட்ஸாப்பில் பதுங்கினான்.
கேள்விக்கு விடை பெற அவ்வப்போது கூகிளிடம் தஞ்சமடைந்தான்.
வியர்வை வழியாத ஆட்டங்களை கைபேசியில் ஆடினான்.
முகம் பார்த்திராத நபர்களுக்கெல்லாம்
கட்டை விரல் உயர்த்தி
இன்ஸ்டாகிராமில் வாழ்த்துரைத்தான்.
இவன் போட்ட நாய்க்குட்டி போட்டோவுக்கு நூற்றுக்கணக்கில் லைக்குகள் அள்ளின.
ஒரு மழைக்காலப் பின்னிரவில் அவன் அந்திமம் நேர்ந்த போது
அவனது முகநூல் நட்பு வட்ட எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருந்தது
மறுதினம் அவன் கல்லறையில் இருந்ததோ ஒற்றை பூங்கொத்து.
நட்புவட்டம் இன்னமும் கடமை உணர்வோடு
முகநூலில் அவனை நலம் விசாரித்துக்கொண்டிருக்கிறது.