சென்னையில்
எம்.ஜி டிரைன் சர்விசை நிறுத்த போவதாக செய்திகள் பத்திரிக்கைகளில்
வந்த போது (ஏறக்குறைய 2004 ஆம் வருடம் என்று நினைக்கிறேன்) எழுதப்பட்டது .
----------------------------------------------------------------------------------------------------------------------------
இத்தனை காலம் இந்த எம்.ஜி.டிரைனில் பயணம் செய்த பல்லாயிரக்கணக்கான எம்.ஜி ரசிகர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்றாவது நீங்கள் சென்னையில் பி ஜி அல்லது எம்.ஜி டிரைனில் பயணம் செய்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உங்களுக்கு இந்த கதையின் ஆரம்ப விஷயங்கள் கொஞசம் புரியாமலோ அல்லது போராகவோ இருக்கலாம். அதில் தான் அடிக்கடி பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்த விஷயங்கள் தானே என்று ரொம்பவே போராக கூட இருக்கலாம்.
ஏன் என்றால் எனக்கு இந்த டிரைனில் பயணம் செய்வது இது தான் இரண்டாவது முறை. சென்னையில் இருந்த ஆரம்ப கால கட்டங்களிலும் கல்லூரி வாழ்விலும் பேருந்துகளிலேயே பயணித்திருந்த எனக்கு முதல் முறை பயணம் செய்த போதே மிகவும் வினோதமாக இருந்தது. அத்தனை கூட்டத்திலும் பிச்சை எடுப்பவர்கள், பல தரப்பட்ட வியாபாரிகள் மற்றும் சண்டை சச்சரவுகள். இது ஒரு தனி உலகமாகத் தான் பட்டது. இந்த ட்ரைனிலேயே பாதி வாழ்க்கையை கழித்தவன் என் கசின் குரு. நிறைய விஷயங்கள் எனக்கு ஈ-மெயில் கடிதம் மூலம் எற்கனவே சொல்லியிருந்தான்.
பிச்சை எடுப்பவர்கள் பல தரம். அதில் ஒரு வகை கண் தெரியாதவர்கள். பாட்டு பாடிக்கொண்டு..
"கண்ணண் வந்தான் இங்கே கண்ணன் வந்தான்.. ஏழை கண்ணீரை கண்டதும்.. "இது தான் அதிகமாக கேட்கும் ஒரு பாட்டு என்று என் கசின் கூறுவான். நான் முதல் முறை பயணம் செய்த போது கேட்ட பாடல் "காகித ஓடம் கடலலை மீது போவது போலே..
(நாம எல்லாருமே அத விட ஸ்லோவா தான் போறோம் இந்த டிரைன்ல.. என்று ஒருவரின் கமென்ட்)
பொதுவாக கண் பார்வை இல்லாதவர்கள் விற்பதற்கு கொண்டு வரும் பொருள்கள் ரேஷன் கார்ட் கவர், டிரைன் பாஸ் கவர், கத்திரி, நகம் வெட்டி, அஞ்சு செல் பத்து ரூபா.. இங்கு நடக்கும் வியாபாரம் அதை விட அதிசயமாம்... ஒரு ரூபாய்க்கு பல விஷயங்கள் கிடைப்பதாக தெரிகிறது. வேர்க்கடலை, பேனா,பென்சில்,பாப் கார்ன், மசாலா பொரி, கர்சீப், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, இந்த லிஸ்ட் மிக நீளமானது. இதை தவிர.. தலை சுற்றல், ஜலதோஷம், பித்தம், கபம், வாந்தி, மயக்கம், அஜீரணம், தொண்டை கரகரப்பு, தலை வலி என்று அனைத்து வியாதிகளுக்கும் அதிசய நிவாரணி... ஒரே ரூபாய்க்கு.. இஞ்சி மொரப்பா.. மேலும் பத்து ரூபாய்க்கு ஆயிரம் கேள்வி பதில்கள் கொண்ட புத்தகம்.
டிரைனுக்கு உள்ளே கூட போஸ்டர்கள்.. 'மனிதன் காணவில்லை..' என்ற போஸ்டரை பார்த்து அசந்து விட்டேன். ஏதோ அற்புதமான கவிதை என்று நினத்து படித்து பார்த்தால் நிஜமாகவே யாரோ காணாமல் போன செய்தி தான். மேலும் சில போஸ்டர்கள்-
மூலம், பௌத்திரம்..விரை வீக்கம் போன்ற சில வியாதிகளுக்கு உத்திரவாதமான நிரந்தர தீர்வு காணும் மருத்துவம் பற்றி.. பொதுவாக அந்த டாக்டர்கள் எல்லாருமே வட இந்தியர்களாக ரயில்வே ஸ்டேஷன் அருகில் கிளினிக் வைத்தவர்களாக இருந்தார்கள். மற்றும் நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன மருந்து என்று விளக்கும் மருத்துவ போஸ்டர்கள்.

என் கசின் குருவின் நீண்ட நாள் அனுபவம்
மற்றும் ஆராய்ச்சிப்படி இங்கு நடக்கும் சண்டை சச்சரவுகள் ஏறக்குறைய ஒரே
மாதிரியானவை தான்.. இறங்க போகிறவர்கள் ஒரு அணி.. வழியில் நிற்பவர்கள் ஒரு
அணி.. 'இறங்காதவங்க எறங்கி ஏறுங்க..' வழியில் நிற்பவர்கள் அவரவர் இறங்கும்
இடம் வரும் போது எதிர் அணிக்கு போய் விடுவார்கள். அதிகமாக நம் காதில்
விழும் வார்த்தை " எறங்க போறிங்களா?" அதிகம் சண்டை சச்சரவுகளுக்கு காரணமும்
இந்த வார்த்தைகள் தான். உடனே" நான் என்ன எறங்கமால் டிரைனிலே இருக்க
போறேனா?" என்ற பதில் வரும். "அப்ப உள்ள போயிடுங்க." இவ்வளவு நேரமா நீங்க
இங்கயே தானே நின்னுட்டு இருந்திங்க. நீங்க எறங்க போகும் போது எல்லாரும்
உள்ள போயிடனமா?" சண்டை ஆரம்பமாகும்.. அதிசயம் என்னவென்றால் இந்த
கூட்டத்திலும் சண்டையிலும் ஏதோ யோக நிஷ்டையில் இருப்பவர் போல மடித்துப் பிடித்த படி தினமலர் படிக்கும் சூட்கேஸ் ஆசாமி..
என்னுடைய இரண்டாவது பயணம் நிகழ்ந்தது சமீபத்தில் நான் சென்னைக்கு வந்த போதுதான். சட்டென்று கிண்டியிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் செல்ல வேண்டியிருந்தது அதற்கு மிகவும் சுலபமான வழி பி ஜி டிரைன் தான். ஒரு ஆட்டோ அல்லது கால் டாக்ஸி பிடிப்பதை விட துரிதமாக செல்வது இதில் சாத்தியம். ஒரு முக்கியமான கிளையண்டை சந்திக்க வேண்டியிருந்தது. ரெயில்வே மினிஸ்டரியில் டெக்னிக்கல் டிப்பார்ட்மெண்ட்டுக்கு பிராஜக்ட் கன்சல்டண்ட் ராஜாராம்.. மிக முக்கிய புள்ளி. இன்று மங்களூர் வெஸ்ட் கோஸ்ட்டில் போகிறார். அதற்குள் அவரை சந்திக்க வேண்டும். என் கசின் குரு தான் பி.ஜி டிரைனை பிடிக்கும் ஐடியாவை கூறியது மட்டும் அல்லாமல் கிண்டி வரை என்னை ட்ராப் செய்து விட்டு போனான். அது மட்டுமன்றி என் தொழில் ரீதியாகவும் இந்த பயணம் மிகவும் அவசியப்பட்டது.
மணி பத்துக்கு மேல் ஆகி விட்டதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. உட்கார இடம் கிடைக்கவில்லை என்றாலும் ஒரளவுக்கு வசதியாக நிற்க முடிந்தது. என் அருகில் நின்றிருந்த நபர் அழுக்கு உடையணி¢ந்த கைப்பை வைத்திருந்த இன்னொருவருடன் பேசத் தொடங்கினார்.
"எவ்வளோ மெதுவா போது பாருங்க.. இதே எம்.ஜி டிரைன்னா பறக்கும்.. பத்து பதினைந்து நிமிஷத்தில் எக்மோர் போயிடும்." அதற்கு கைப்பை நபர் பதில் கூறினார். "அது என்னா விஷயம் தெரியுமா?" சட்டென்று பதிலை என்னைப் பார்த்து கூற தொடங்கி விட்டார். இந்த டிரைனுக்கு உடம்பு பெரிசு.. ஆனா கால் பாருங்க..ரொம்ப சின்னது..அதனால செரியா பாலன்ஸ் செய்ய முடியாது.. அதான் விஷயம். அடுத்த நபர் அதை ஆமோதித்தாலும் கைப்பை நபருக்கு என்ன தோன்றியதோ என்னையே பார்த்த படி மேலும் பேச தொடங்கினார். நான் ஒன்றும் புரியாமல் விழித்த படி அவரையே பார்த்தபடி இருந்தேன். "அதாவது இந்த வாத்து இல்ல.. அத பாருங்க.. எப்படி நடக்குது.. காரணம் என்ன?" என்னை பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தார் என்று தோன்றியது. ஆனால் என் பதிலை பற்றி கவலைப்படாமல் இப்போது என் பக்கமாக திரும்பிக்கொண்டு பேச தொடங்கி விட்டார். விவாதத்தை ஆரம்பித்த நபர் அடுத்த ஸ்டேஷனில் நுங்கம்பாக்கத்தில் இறங்கி போய் விட்டார்.
"காரணம் அதுக்கு கால் கீழே தட்டையா பெருசா இருக்கு.. அதே எலிய பாருங்க..கால் சின்னது..ஒடம்பு குறுகலா இருக்கு..அதனால
ஸ்பீடா போவும்.." அதிக நேரமாக அவர் கூறுவதையே கேட்டுக்கொண்டு இருந்தது கஷ்டமாக இருந்ததால் நான் ஒற்றை வார்த்தைகளில் கொஞ்சம் பேசத் தொடங்கினேன். " ம்.. அதனால.."
அதான்... கொஞசம் டிரைனோட பாடிய கொறச்சு கால சிறுசாக்கனா...
டிரைனோட காலா?
அதான் சார்.. சக்கரம்.. அப்புறம் ஸ்பீடு வந்துடும்.. இந்த டெக்னிக்க தான் எம்.ஜி.டிரைன்ல பண்ணி இருக்கான்.. அதெல்லாம் வெள்ளக்காரன் பண்ணது.. நம்ம ஆளுங்களுக்கு அவ்ளோ விஷயம் கெடையாது... ஸ்தம்பித்தபடி அவரையே பார்த்து நின்ற எனக்கு அப்போது தான் எக்மூர் ஸ்டேஷன் வந்தது தெரிந்தது..
கைப்பை நபர் "சரி சார்..என் ஸ்டாப்பிங் வந்துச்சு.. நான் வரேன். ஏற்கனவே லேட்.. மேஸ்திரி திட்டுவான்.." என்ற படி விரைந்தார். இறஙக போன அவரை லேசா வழி மறித்து எங்க சார் வேலை? என்று கேட்டு வைத்தேன்.. அவசரமாக இறங்கியபடி" கொளுத்து வேலை சார்.."
புரியாமல் நான் விழிக்கவே "கொத்தனார் வேலை..கட்டடம் கட்றது.."என்று கூறி கூட்டத்தில் மறைந்தார்.
சொல்லி வைத்த படி சென்ட்ரல் ஸ்டேஷனில் பர்ஸ்ட் கிளாஸ் வைட்டிங் ஹாலில் சங்கர் காத்திருந்தான்.. உடன் ராஜாராம்..
இருவரும் என்னை கண்டதும் எழுந்து கை குலுக்கினர்.. சங்கர் என்னை ராஜாராமுக்கு அறிமுகம் செய்து வைத்தான்..
"இவர் தான் மணிசேகர்.."
"நல்லா தெரியும்.. ஜப்பான்ல பாஸ்டஸ்ட் டிரைன் டிசைன் செய்த பத்து டெக்னிக்கல் எக்ஸ்பர்ட்ஸ்ல ஒருத்தர்.. இன் பாக்ட் உலகத்திலேயே பாஸ்டஸ்ட் டிரைன் டிசைன் செய்யும் ஜப்பானின் டெக்னிக்கல் கமிட்டில ஒரு முக்கியமான மெம்பர்."

நான் ஒன்றும் பதில் சொல்லும் முன் ராஜாராம் கேட்டார். " சார்.. இங்க நம்ம ஊர்ல டிரைன் ஸ்பீட் இன்னும் கொஞசம் கூட்ட என்ன செய்யலாம்னு சிம்பிளா ஒரு சஜ்ஜஷன் சொல்லுங்களேன்?"
" ஒன்னும் இல்லை. ஒடம்ப கொஞ்சம் குறுகலாக்கி கால சின்னதாக்கினா போதும்... "
கூறி விட்டு கபகப என்று சிரித்த என்னை ஒன்றும் புரியாமல் விழித்தபடி ஏதோ
பைத்தியக்காரனை போல பார்த்தார்கள் இருவரும்.
--------------------------------------------------------------